சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் பன் மாநில கருத்தரங்கம், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் அமர்வுக்கு கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு) தலைமைத் தாங்கிப் பேசினார். மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரசிரியர் அ.மார்க்ஸ் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கியும், அனைவரையும் வரவேற்றும் பேசினார்.
பின்னர் தமிழகத்தின் மூத்த மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.வி.இராஜதுரை கருத்தரங்கைத் தொடக்கி வைத்து கருத்துரை ஆற்றினார். இந்திய - தமிழக மனித உரிமை இயக்க வரலாற்றையும், மனித உரிமை இயக்கம் சுயேட்சையாக செயல்படுவது குறித்தும் விரிவாக அவர் பேசினார்.
பின்னர், தில்லிப் பத்திரிகையாளர் சந்தியா சிவராமன், ஐதராபத்திலிருந்து வந்திருந்த மனித உரிமை மன்றத்தின் பொதுச்செயலாளர் வி.எஸ்.கிருஷ்ணா ஆகியோர் கருத்துரை வழங்கினர். பின்னர் உணவு இடைவேளைக்குப் பின்னர் தற்போது கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மதிய அமர்வில் தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அபூர்வானந்த் உரையாற்றினார். தற்போது மக்கள் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பேராசிரியர் பாபையா உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
கருத்தரங்கில் பேசிய அனைவரும் மனித உரிமை அமைப்புகள் சுயேட்சையாக செயல்படுவது பற்றியும், எந்த ஒரு கட்சியையோ, அமைப்பினரையோ சார்ந்து இருக்கக் கூடாது என்பதை விளக்கிப் பேசினர். ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் பற்றி பேசுவது மனித உரிமைக்கு எதிரானது என்றும், சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் எதிர்கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர்
3 comments:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Chennai best Tax Consultant | ESI & PF Consultant in Chennai | GST Consultant in Bangalore | GST Consultant in Chennai | GST Consultant in TNagar | GST Filing Consultants in Chennai | GST Monthly returns Consultant in Chennai | GST Tax Auditor in Chennai | GST Tax Auditors in Chennai | GST Tax Consultant in Bangalore | GST Tax Consultant in Chennai | GST Tax Consultant in Chennai Sales Tax | GST Tax Consultant in TNagar | GST Tax Consultants in Chennai | GST Tax Filing Auditors in Chennai | GST Tax Filing in Chennai | GST Tax returns Consultant in Bangalore | GST Tax returns Consultant in Chennai | GST Tax returns Consultant in TNagar | Import Export code registration Consultant in Chennai
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Income Tax Auditor in Chennai | Income Tax Auditors in Chennai | Income Tax Filing Consultant in Chennai | Income Tax registration in Chennai | Income Tax returns in Chennai | LLP Registration in Chennai | MSME Consultant in Chennai | One Person Company Registration | One Person Company Registration in Chennai | Partnership Firm Registration | Partnership Firm Registration in Chennai | Private limited Consultant in Chennai | Private Limited Company Registration | Private Limited Company Registration in Chennai | Proprietorship Company Registration | ROC registration Consultants in Chennai | Sales Tax Auditors in Chennai | Sales Tax Consultant in Chennai | Service Tax Consultant in Chennai | Tax Consultant in Chennai | TDS Refund Consultant in Chennai | TIN number in Chennai
Post a Comment